சென்னை தேனாம்பேட்டையில் இரும்பு பாலத்தில் உத்தரங்கள் பொருத்தும் பணி தீவிரம்!!
சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை இடையில் அமைக்கப்பட்டு வரும் 3.2 கிலோ மீட்டர் நில உயர்மட்ட இரும்பு பாலத்தில் குறுக்கு உத்தரங்கள் பொருத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை எல்டாம்ஸ் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை, செனடாப் சாலை, நந்தனம், சிஐடி நகர் மூன்றாவது மட்டும் முதல் பிரதனசாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சந்திப்புகளை கடக்கும் வகையில் 3.2 கி.மீ., நிலத்தில் நான்கு வழித்தட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்ணா சாலைக்கு கீழே செல்லும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பாதிக்காத வகையில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த உயர்மட்ட பாலத்திற்காக மொத்தம் 135 தூண்கள் அமைக்கப்படுகின்றன. தூண்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்ற இடங்களில் இரும்பு குறுக்கு உத்தரம் பொருத்தும் பணிகள் நடைபெற்ற வருகிறது. ஒரு உத்தரம் 22 டன் எடையும் குறுக்கு உத்தரம் 9 டன் எடையும் கொண்டதாககும். ஒரு பால கண்ணுக்கு 5 உத்தரங்களும் மற்றும் 2 குறுக்கு உத்தரங்களும் பொருத்தப்படுகின்றன. வாகன போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை உயர்திறன் கொண்ட கிரேன்களை பயன்படுத்தி உத்தரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உயர்மட்ட பாலத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.