சுதந்திர தின விடுமுறையையொட்டி சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில்
மதுரை: சுதந்திர தின விடுமுறையையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர தினத்தையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து ஆக.14ம் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 11.30 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து சேரும். இதேபோல் செங்கோட்டையில் இருந்து ஆக.17ம் தேதி மாலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்று சேரும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 4 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு சரக்குப் பெட்டியுடன் மற்றும் ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.