சென்னையில் ரயில் நிலையங்கள், பொது இடங்களில் செல்போன் திருடும் நவோனியா கும்பல்: மக்களே உஷார்
சென்னையில் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் செல்போன் திருட்டில் ஈடுபடும் நவோனியா கும்பல் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்த கும்பல் கூட்டம் நிறைந்த இடங்களில் துண்டுகள், கைகுட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
கண் அசரும் நேரத்தில் பயணிகளின் பணத்தையோ அல்லது செல்போனையோ திருடிவிட்டு வந்த வேலை முடிந்துவிட்டது என கிளம்பிவிடுகின்றனர்.இது தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ரயில்வே காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Advertisement