சென்னை புழல் சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் திடீர் சோதனை..!!
Advertisement
இதுதவிர தியான மண்டபம், சமையலறை, நூலகம், ஆம்பி தியேட்டர், ஆடிட்டோரியம், ஜெயில் கொர்ட், வீடியோ கான்பரன்சிங் வசதி, உயர் பாதுகாப்பு பகுதி, உடற்பயிற்சி கூடம், கேண்டீன், பொது இசை கட்டமைப்பு, புத்துணர்ச்சி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில், புழல் சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் இன்று காலை புழல் சிறைக்கு சென்றனர். அங்கு சிறைவாசிகளுக்கான வசதிகள், உணவு தரம் குறித்து நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் சிறைவாசிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து தனிமைச் சிறை, உயர் பாதுகாப்பு சிறை, பெண்கள் சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement