சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசுப்பேருந்து கூவத்தூரில் இருந்து வந்த வேன் மீது மோதல்: 2 பெண்கள் பலி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து தனியார் வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் கூவத்தூரில் இருந்து 20 பேரை வேலைக்காக ஏற்றிக் கொண்டு சென்ற வேனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்தில் வந்தவர்களும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சதுரங்கபட்டினம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழி சாலை அமைக்க சாலை விரிவாக்கப்பணி நடைபெற்றுவருகிறது. அந்த சாலைகள் சேறும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதே போல் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்தும் ஒரு வழி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.