சென்னையில் இதுவரை 1,869 பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன: காவல்துறை தகவல்
Advertisement
சென்னை: சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்படுகின்றன. பட்டினப்பாக்கம் கடற்கரையில் 1126 சிலைகள், ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 166 சிலைகள், மீன்பிடி துறைமுக பகுதியில் 195 சிலைகள், பாலவாக்கத்தில் 534 சிலைகள், திருவொற்றியூரில் 14 சிலைகள் கரைக்கப்பட்டது.
Advertisement