சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மழைநீர் தேங்கும் பகுதிகளுக்கு உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மழைநீரை அகற்ற 50 எச்.பி. வரையிலான 594 மோட்டார் பம்புகள், 192 நீர்மூழ்கி பம்புகள், 500 டிராக்டர் பம்புகள், 478 இயந்திரங்கள் கொண்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
Advertisement
Advertisement