தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மாநகரில் 1,436 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் துரித நடவடிக்கை !

சென்னை: சென்னை மாநகரில் 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. 1,436 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் துரித நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

Advertisement

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை மாநகரில் 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான போக்குவரத்து பராமரிக்கப்பட்டுள்ளது. நேற்று (22.10.2025) காலை காலை 8.30 மணி முதல் இர‘வு 9 மணி வரை சராசரியாக 4.66 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழைப்பொழிவும் (பெருங்குடி மண்டலம்), குறைந்தபட்சமாக திருவொற்றியூரில்

0.30 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும். வகையில் நேற்று (22.10.2025) 68 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 பேருக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 பேருக்கு மதிய உணவும், 15 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 பேருக்கு இரவு உணவும், என மொத்தம் 3,96,400 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 106 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகளும், 150 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகளும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

17.10.2025 முதல் 22.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 24 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணிற்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் தொடர்பான புகார்களை 1916 என்ற உதவி எண்ணிற்கும் கட்டணமில்லாமல் 24 மணி நேரமும் தெரிவித்து தேவையான உதவிகளை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News