சென்னை மெட்ரோ ரயிலுக்கான வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு..!!
சென்னை: மெட்ரோ ரயிலுக்கான வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, சென்னை மெட்ரோ ரயிலுக்கான வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், பயணிகள் CMRL மொபைல் செயலி, Paytm, phonepe, Singara Chennai Card, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. எனவே, அனைத்து பயணிகளும் பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஏற்பட்ட சிரமத்திற்கு CMRL வருந்துகிறது. மேலும் தகவல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.