தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மெட்ரோவில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுக்க "Anti Drag Feature" என்ற புதிய வசதி அறிமுகம்!!

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுக்க புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின், முதல் கட்டத்தில் இயங்கும் மெட்ரோ இரயில்களின் அனைத்து பெட்டி கதவுகளிலும் "Anti Drag Feature" நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisement

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், முதல் கட்டத்தில் இயங்கும் 52 மெட்ரோ இரயில்களின்அனைத்து பெட்டி கதவுகளிலும் "Anti Drag Feature" நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை Faiveley Transport Rail Technologies India Private நிறுவனத்திற்கு ரூ.48.33 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), திரு. மனோஜ் கோயல் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் திரு.ஏ. ஆர். ராஜேந்திரன் (மெட்ரோ இரயில், சமிக்கை மற்றும் தொலைத் தொடர்பு), மற்றும் Faiveley Transport Rail Technologies India Private நிறுவனத்தின் இயக்குநர் திரு. புனீத் மெஹ்ரோத்ரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் திரு. சி. பாலமுருகன் (மெட்ரோ இரயில்), சென்னை மெட்ரோஇரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சிறந்த சேவை வழங்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒருபகுதியாக, நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ இரயில்களின் அனைத்து பெட்டி கதவுகளிலும் 'Anti Drag Passenger Door Safety System' எனப்படும், "கதவில் சிக்கிக்கொண்டு இழுத்துச் செல்வதைத் தடுக்கும் பயணிகள் பாதுகாப்பு அமைப்பிற்கான" வடிவமைப்பு (Design), பொருட்கள் வழங்குதல் (Supply), நிறுவுதல் (Installation), சோதனை செய்தல் (Testing), செயல்பாட்டிற்கு கொண்டு வருதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

தற்போது, மெட்ரோ இரயில்களின் கதவு அமைப்புகள் தானியங்கி கதவுகளைக் (Automatic sliding doors) கொண்டுள்ளன, இவை தடைகளைக் கண்டறியும் அமைப்புடன் (Obstacle detection system) இணைக்கப்பட்டுள்ளன. பயணிகள் ஏறி முடித்தவுடன், நிலையங்களில் கதவுகள் மூடும்போது, கதவுகளுக்கு இடையூறாக இருக்கக்கூடிய பொருட்களை இந்த அமைப்பு கண்டறியும்.

பயணிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, Anti-Drag System உடன் கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தை நிறுவ உள்ளது. இதன் மூலம், மெட்ரோ இரயிலில் இருந்து இறங்கும்போது தவறுதலாக கதவுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளக்கூடிய சேலைகள், பெல்ட்கள், பைபட்டைகள், பாட்டில் பட்டைகள் போன்ற மெல்லிய பொருட்களையும் கண்டறிய முடியும்.

இந்த புதிய அமைப்பின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது இழுத்துச் செல்லும் (pull and drag force) விசையைக் கண்டறியும் திறன் கொண்டது. ஒரு நபர் அல்லது பொருள் கதவில் சிக்கிக் கொண்ட நிலையில் மெட்ரோ இரயில் நகரத் தொடங்கும்போது அது இழுக்கப்பட்டால், இந்த அமைப்பு அதைக்கண்டறியும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, மெட்ரோ இரயில் தானாகவே அதன் அவசரகால பிரேக்கை (emergency brake) போட்டு, மெட்ரோ இரயிலை உடனடியாக நிறுத்திவிடும். அதுமட்டுமின்றி, இது உடனடியாக மெட்ரோ இரயில் ஓட்டுநரின் பார்வைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் ஓட்டுநர் விரைவாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்க முடியும்.

சென்னை மெட்ரோ இரயில்களில் இதுவரை கதவில் யாரும் சிக்கியதால் விபத்துகள் எதுவும் நடக்கவில்லை. இருந்த போதிலும், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு ஆகும். இதன் மூலம், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்து, அனைத்துப் பயணிகளுக்கும் உயர்ந்த தரமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது.

இந்த வசதியானது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் மெட்ரோ இரயில்கள் அனைத்திலும் ஒரு நிலையான அம்சமாக இணைக்கப்பட்டுவருகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது அமைப்புகளைத் தரம் உயர்த்துவதிலும், பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்வதிலும் தொடர்ந்து உறுதியுடன் உள்ளது."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News