சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் ஓதுவார் பயிற்சி 2025-2026 ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 14 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Advertisement
பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்துடன் மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும். ஓதுவார் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Advertisement