சென்னையில் கந்துவட்டி வழக்கில் பெண் ரவுடி அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!!
சென்னை: கந்துவட்டி வழக்கில் பிரபல பெண் ரவுடி புலியாத்தோப்பு அஞ்சலைக்கு எழும்பூர் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் மஜார் கான்(44) என்பவர் அஞ்சலையிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அஞ்சலை மேலும் ரூ.9.5 லட்சம் கேட்டு தொந்தரவு செய்தவுடன் அடியாட்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் அஞ்சலைக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Advertisement
Advertisement