சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல்: பத்திரமாக தரையிறக்கிய விமானி!
சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் இருந்து இன்று அதிகாலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை கவனித்த விமானி உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விமானி தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து விமானி விமானத்தை பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் 74 பயணிகள், 5 விமான பணியாளர்கள் என மொத்தம் 79 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மேலும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். சாதுரியமாகச் செயல்பட்ட விமானி பத்திரமாக தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.