சென்னை: சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மதிப்பீட்டாளர்கள் சேர்ந்து நூதன முறையில் வீட்டுக் கடன் மோசடி செய்துள்ளனர். விற்கப்படாத வீடு மற்றும் மனைகளை அதிக விலைக்கு மதிப்பை உயர்த்தி போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது. தனியார் கட்டுமான இயக்குநர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் என 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. எஸ்.பி.ஐ. வங்கி தரப்பில் சுமார் ரூ.3.67 கோடி மோசடி என கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.