சென்னையில் விடுமுறை நாட்களில் 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!!
சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து அக்டோபர் 31ல் 340 சிறப்புப் பேருந்துகளும், நவம்பர் 1ல் 350 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து அக்டோபர் 31ல் 55 சிறப்புப் பேருந்துகளும், நவம்பர் 1ல் 55 சிறப்புப் பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மாதவரத்தில் இருந்து அக்டோபர் 31, நவம்பர் 1ம் தேதிகளில் தலா 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement