சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து நந்தனம் இல்லத்துக்கு மாறினார் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து நந்தனம் இல்லத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மாறினார். நந்தனம் அடுக்குமாடி குடியிருப்பில் 2வது தளத்தில் வீடு; முதல் தளத்தில் உள்ள பிளாட்டில் அலுவலகம் செயல்பட உள்ளது. ஓ.பி.எஸ்.க்கு பாதுகாப்பு வழங்கும் காவலர்களும் நந்தனத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விட்டனர். அரசு பங்களாவை காலி செய்த பிறகு ஆழ்வார்பேட்டை, தியாகராயர் நகர் என அடுத்தடுத்து வீடு மாறி குடியேறினார். ஜோதிடர் கூறியதன்பேரில் தற்போது கிரீன்வேஸ் சாலை வீட்டை காலி செய்துவிட்டு நந்தனம் விட்டில் குடியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement