சென்னையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து மீட்பு: ஆந்திர மாநிலம் நெல்லூரில் வாகன சோதனையின்போது பிடிபட்ட இளைஞர் கைது
சென்னை: சென்னை கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. அரசு பேருந்து ஒன்று கோயம்பேட்டில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. நேற்றைய தினம் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திருப்பதி செல்லும் பேருந்தை நின்று கொண்டு இருந்தது. இதனையடுத்து சுமார் காலை 7.30 அளவில் இந்த பேருந்து திருடப்பட்டு இருக்கிறது. இதை குறித்து பணியில் இருந்த ஊழியர்கள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் காவல்துறை வாகன சோதனை போது சிக்கியுள்ளது என்றும் ஒரு வாலிபர் அந்த வாகனத்தை ஒட்டி சென்று இருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பேருந்து குறித்து அவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின்னாக பதில் தெரிவித்த நிலையில், உடனடியாக அங்கு இருந்து காவல் நிலையாயத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு காவல் நிலைய போலீசார் அங்கு சென்று பேருந்தை மீட்டனர். பின்னர் பேருந்து திருடி சென்ற வாலிபர் ஆந்திர மாநிலதை சேர்ந்த ஞானராஜன் சாகு என்ற வாலிபரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பட்டப்பகலில் அரசு பேருந்து ஒரு வாலிபர் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.