சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.91,840க்கு விற்பனை
சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 11,270 ரூபாய்க்கும், பவுன் 90,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,410க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வை கண்டு இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.91,840க்கு விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.560 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.169க்கு விற்பனை ஆகிறது.