சென்னையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி தேவை: சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னையில் தேர்தல் பரப்புரை ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடிக்கம்பங்களை அமைக்க மாநகர்ச்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, கருத்தரங்கம் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், திருவிழா போன்ற நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெட்ரா பிறகே தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது. முன் அனுமதியின்றி நிறுவப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்றப்படும் எனவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.