சென்னை: சென்னை விருகம்பாக்கம் அருகே போதை ஊசி பயன்படுத்திய பிளஸ் 1 மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நண்பர்களோடு காஃபி ஷாப்புக்கு சென்றபோது போதை ஊசி பயன்படுத்தியதால் சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆன்லைனில் போதை ஊசி வாங்கி பயன்படுத்தியது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.