சென்னை மாநகராட்சியில் ஏப் முதல் செப்.20 வரை ரூ.900 கோடி சொத்து வரி வசூல் ..!!
சென்னை: ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.900கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களின் வாயிலாக கடந்த 2024-2025-இல் ரூ.2,023 கோடி வசூலிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை அரையாண்டு வரிவசூல் நடைபெறுகிறது. அதனடிப்படையில் வரும் செப்.30-க்குள் நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டுக்கு வரி செலுத்துவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 20ம் தேதி வரை 900கோடி வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் 75% இணையம் மூலம் வரி செலுத்தி இருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது 13.50 லட்சம் கட்டடங்கள் சொத்து வரி செலுத்த வேண்டும். என்ற நிலையில், சுமாா் 8 லட்சம் கட்டடங்களுக்கு வரி வசூலிக்கப்படுவதாகவும், நடப்பு வருவாய் ஆண்டில் ரூ.2300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்டமிடப் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.