மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம், ரன்வேயில் தரையிறங்கிய போது தீப்பிடித்து விபத்து
சென்னை: மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம், ரன்வேயில் தரையிறங்கிய போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. ஓடுபாதையில் சரக்கு விமானம் தரையிறங்கியபோது விமானத்தின் 4ஆவது எஞ்சினில் தீப்பற்றியது. எஞ்சினில் தீப்பிடித்த நிலையிலும், சரக்கு விமானத்தை விமானிகள் பத்திரமாக தரையிறக்கினர். விமானம் நிறுத்தப்பட்டதும், உடனடியாக இழுவை வாகனங்கள் மூலம், விமான நிறுத்தப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது.