தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

HDFC வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் தொழில் கடன் பெற்று வங்கியை ஏமாற்றி மோசடி செய்த, சென்னையைச் சேர்ந்த 3 நபர்கள் கைது

 

சென்னை, HDFC வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் தொழில் கடன் பெற்று வங்கியை ஏமாற்றி மோசடி செய்த, சென்னையைச் சேர்ந்த 3 நபர்கள் கைது. மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை புகார்தாரர் திரு கிலியன் குமார். என்பவர் சென்னை, அமைந்தகரையில் இயங்கி வரும் Credit Intelligence & Control Unit, HDFC Bank-ல் மேலாளராக பணிபுரிந்து வருவகாகவும், அவரது வங்கியில் திருமதி குமுதா கிருஷ்ணன் என்பவர் மிதுன் என்பவர் மூலம் வங்கியின் Relationship Manager திரு.யாசர் அராபத் என்பவரை அணுகி M/s.IVR Enterprises என்ற நிறுவனத்திலிருந்து ACE 25 XW Mobile Crane என்ற வாகனம் வாங்குவதற்காக வங்கியில் Commercial Equipment Loan ரூ.30,75,000/- வேண்டி KYC, AY ITR, SBI Account Statement, Margin money receipt, Quotation, Invoice, Work Order போன்றவற்றை வங்கியில் சமர்ப்பித்து, 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.30,91,717/- கடன் பெற்றுள்ளதாகவும், மேலும் இதே போல் கிரு.ஜாகிர் அலி என்பவரும் வங்கியை அணுகி M/s.IVR Enterprises ACE 25 XW Mobile Crane வாகனத்தை, வாங்கவிருப்பதாக தெரிவித்து வங்கியில் Commercial Equipment Loan ரூ.30,87,000/- வேண்டி, அதற்காக KYC, AY ITR, Account Statement, Margin money receipt, IVR Enterprises- Quotation Proforma Invioce, Work Order போன்றவற்றை வங்கியில் சமர்பித்து 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.30,87,717/- கடன் பெற்றுள்ளதாகவும், மேற்படி இரண்டு கடன்களுக்கும் வங்கியின் Relationship Manager கிரு.யாசர் அராபத் Dealership Verify செய்து பார்த்ததாகவும்,

அதன் பின்னர் கடன்தாரர்கள் கடன்தொகையை திரும்ப செலுத்தாமலும் மேற்படி கடன்தொகையில் பெற்ற Crane வண்டியின் RC, Insurance போன்றவற்றை ஒப்படைக்காமலும் இருங்ததால் வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட Internal Investigation-ல் கடன்தாரர்கள் வங்கியில் சமர்ப்பித்திருந்த Invioces, Quotation மற்றும் Work Order போன்றவைகள் போலியானவை என்றும், மேற்படி நிறுவனமானது Crane விற்கும் நிறுவனம் அல்ல டிராக்டர் விற்கும் நிறுவனம் என்று கெரியவந்ததாகவும் கடன்தாரர்களின் Dealership Verify செய்து பார்க்காமல் கடன் வழங்கிய யாசர் அராபத் M/s.IVR Enterprises உரிமையாளர் ஆகியோர் கூட்டு சேர்ந்து வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து கடன்பெற்று அக்கடன் தொகையை திரும்பி செலுத்தாமல் வங்கிக்கு ரூ.60,00,000/- இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆகவே மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 11.07.2025 அன்று மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் (Bank Fraud Investigation Team) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண். இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் காவல் கூடுதல் ஆணையாளர், திருமதி A.ராதிகா,இ.கா.ப அவர்களின் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு, வங்கிமோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், எதிரிகள் போலி ஆவணங்கள் தயார் செய்து, வங்கியில் சமர்ப்பித்து தொழில் கடன் பெற்று அக்கடன் தொகையில் தொழிலுக்கு உபயோகபடுத்தாமல், தனது சொந்த செலவிற்கு உபயோகபடுத்தியும், அக்கடன் தொகையை வங்கிக்கு திரும்ப செலுத்தாமல் வங்கிக்கு ரூ.60,00,000/- இழப்பீடு ஏற்படுக்கியது தெரியவந்துள்ளது. அகன்பேரில், மேற்படி மோசடியில் ஈடுபட்ட 1.குமுதா கிருஷ்ணன், பெ/வ.42/25, க/பெ.கிருஷ்ணன், நேரு நகர் முதல் தெரு, வில்லிவாக்கம் சென்னை 49, 2.யாசர் அராபத், த/பெ.சாகுல் அகமது, மேற்கு கூவம் ரோடு, சிந்தாதிரிப்பேட்டை சென்னை, 3.ராதா கிருஷ்ணன், ஆ/வ.47/25. க/பெ.கண்ணன், ரத்தினம் தெரு, வாசுதேவநல்லூர், மேற்கு ஜாபர்கான்பேட்டை, சென்னை ஆகியோரை 09.08.2025 அன்று சென்னையில் கைது செய்து விசாரணைக்கு பின்னர் கூடுகல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எழும்பூரில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

 

Related News