சென்னை அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு!!
சென்னை: அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் உயரழுத்த மின் கம்பியில் பழுது மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில், ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்டு அரக்கோணத்தை நோக்கி வந்த மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.
இதை போன்று சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக பெங்களூருக்கு செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில்வே மற்றும் இன்டர்சிட்டி விரைவு ரயில்களும் கடம்பத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரயில் சேவையானது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நடுவழியில் நின்று இருப்பதால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.