சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.