சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண் மேலாளரை மிரட்டிய ஜிம் உரிமையாளர் கைது!!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண் மேலாளரை மிரட்டிய புகாரில் உடற்பயிற்சி கூட உரிமையாளர் சீனிவாசன் கைது செய்தன. திருமுல்லைவாயலைச் சேர்ந்த சீனிவாசன், சென்னையில் 15 உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டை உடற்பயிற்சி கூட்டத்தில் மேலாளராக இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். தனியாக ஜிம் வைத்து தருவதாக கூறி இளம்பெண் பெயரில் வங்கியில் ரூ.1.75 கோடி கடன் வாங்கியுள்ளார். கடனை கேட்டபோது ஏமாற்றும் நோக்கத்தில் பேசி சீனிவாசன் மிரட்டியதாக இளம்பெண் போலீசார் புகார் அளித்தார். இளம்பெண் புகாரை அடுத்து ஜிம் உரிமையாளர் சீனிவாசனை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்தன.
Advertisement
Advertisement