சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு: பயணிகள் கடும் அதிருப்தி
08:54 AM Nov 04, 2024 IST
Share
சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பயணிகள் அதிக அளவில் வருவதை பயன்படுத்தி விமான கட்டணத்தை பல மடங்காக விமான நிறுவனங்கள் உயர்த்தின. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணம் ரூ.11,925-ஆக அதிகரிப்பு. திருச்சியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணம் ரூ.11,109ஆக அதிகரித்துள்ளது.