சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
சென்னை: சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலகங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் சப்லை செயின்-ஐ அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவின் பாலகங்களில் 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆ.அண்ணாதுரை, அமுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.