செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகி வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.வாசு. இவர் பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும், இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் ஆவார். செங்கல்பட்டு பகுதியில் உள்ல தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிக், குடிநீர் சப்ளை உள்ள தொழில்களில் ஏ.வாசு ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், பாமக நிர்வாகி ஏ.வாசு இன்று மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். இளந்தோப்பு பகுதியில் லாரியில் தண்ணீர் நிரப்ப வந்தபோது வாசுவை மர்ம கும்பல் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது. இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வாசுவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Advertisement