தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டில் விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்திற்க்கு உதவி செய்த லாரி உரிமையாளர்

 

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் அருகே கடந்த 30 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பாலூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பாலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கங்காதரன் மற்றும் மனைவி அமுலு ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளர் தாமோதிரன் என்பவர், தனது லாரி மோதி விபத்து ஏற்படுத்தி இருவர் உயிரிழந்தனர் விபத்தில் உயிரிழந்த கங்காதரம் - அமுலு தம்பதியினர்க்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

மூன்று பேரில் ஒருவருக்கு கூட தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை, எனவே பாதிக்கப்பட்டு குடும்பத்தினர்க்கு உதவ வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் தாமோதிரன் செங்கல்பட்டு தாலுகா நிலையத்தை நாடியுள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனுமதியோடு அவர்களின் முன்னிலையில் தாமோதிரன், விபத்தில் உயிரிழந்த கங்காதரம் - அமுலு தம்பதியின் இரண்டு மகன்கள், ஒரு மகள் என மொத்தம் மூன்று பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாக வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட மூன்று பேரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

எதிர்பாராத விதமாக என்னுடைய ஓட்டுநர் விபத்து நடத்தியதில் தந்தை, தாய் இருவரும் உயிரிழந்தனர், இருவரை பறிகொடுத்தது கட்டாயம் ஈடு செய்ய முடியாத இழப்பு, என லாரி உரிமையாளர் தாமோதிரன் கண்ணீர் மல்க மூன்று பேரிடமும் வருத்தம் தெரிவித்தார். மேலும் உங்கள் மூன்று பேருக்கும் எந்த உதவியாக இருந்தாலும் தகவல் தெரியபடுத்துங்கள் கட்டாயம் நான் உதவி செய்வேன் என காவல்துறையினர் முன்னிலையில் தாமோதிரன் உறுதியளித்தார்.

தனது ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தி இருவர் உயிரிழந்த நிலையில் உதவி என்று யாரும் கேட்காமல் லாரி உரிமையாளர் தாமாக முன் வந்து உதவி செய்தது பாலூர் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துகுமாரசாமி, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதாசிவம், தனிப்பிரிவு காவலர் ஜெகன் மற்றும் காவலர்கள் பாலூர் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Advertisement