கெமிக்கல் கப்பலை சுற்றி வளைத்த ஈரான்.. வேடிக்கை பார்த்த அமெரிக்க கடற்படை: நடுக்கடலில் பரபரப்பு
டெஹ்ரான்: பெட்ரோ கெமிக்கல் சரக்குடன் சென்ற கப்பலை ஈரான் கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் போது அமெரிக்க கடற்படை வீரர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மானில்லிருந்து சிங்கப்பூருக்கு 30ஆயிரம் டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களோடு தலாரா என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் சென்று உள்ளது. இந்த கப்பலை ஜலசந்தி அருகே ஈரானின் கடற்படை வீரர்கள் சுற்றி வளைத்து ஈரான் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர். இந்த கப்பலின் ஈரான் நாட்டுக்கு சொந்தமான பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் இருந்தது என்றும் இது சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக ஈரான் கடற்படை அதிகாரிகள் குற்றம் சாட்டினார். அதே சமயம் வெளிப்படையான வர்த்தக தடைகளை மீறி சட்ட விரோதமாக கடத்தப்படும் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினார். ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கியமான கடல்வழி எண்ணெய் வர்த்தக பாதையாகும்.
இந்த பாதை வழியாகத்தான் உலக நாடுகள் பல எண்ணெய் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கை உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்கலாம் என்று உலக பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது அமெரிக்க கடற்படை வீரர்கள் அங்கு பாதுகாப்பில் இருந்ததாகவும். இந்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டபோது அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதேபோல் கடந்த காலங்களில் அமெரிக்க கப்பல்கள் இஸ்ரேல் கப்பல்களை ஈரான் வழிமறித்து தங்கள் நாட்டு துறைக்குகத்துக்கு எடுத்துச் சென்றபோது மேற்கத்திய நாடுகளோடு பேரம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. அதை ஒரு யுக்தியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.