சில மணி நேரங்களுக்குள் காசோலைகளை பணமாக்கும் புதிய வழிமுறை அக்.4 முதல் அமல்
மும்பை: வங்கிகளுக்கு வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் காசோலைகளை பணமாக்கும் புதிய வழிமுறையை அக்டோபர் 4 முதல் அனைத்து வங்கிகளும் அமல்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இப்போது காசோலைகள் ஸ்கேன் செய்து வழங்கப்பட்டால் பணமாவது குறைந்தது 2 நாட்கள் ஆகிறது.
ஆனால் அக்.4 முதல் சில மணிநேரங்களில் காசோலை வரவு வைக்கப்படும். காலை 10 மணிக்கு வழங்கப்பட்ட காசோலைகள் நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் பணம் பெறும் வங்கியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.