தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரக்காணம் அருகே அசப்பூர் பகுதியில் ஓங்கூர் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்

*விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

மரக்காணம் : மரக்காணம் அருகே அசப்பூர் பகுதியில் உள்ள ஓங்கூர் ஆற்றில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள நகர், ராயநல்லூர், அசப்பூர், நல்லம்பாக்கம், காணிமேடு, மண்டகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையில் செல்கிறது ஓங்கூர் ஆறு.

இந்த ஆற்றின் நீர்மட்ட உயர்வை நம்பி இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் தங்களது விளைநிலங்களில் நெல், தர்பூசணி, மணிலா, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை நடவு செய்கின்றனர்.

ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் இந்த ஓங்கூர் ஆற்றில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. ஆனால் மழை நின்றவுடன் அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆற்றில் செல்லும் வெள்ள நீரானது அருகில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வங்காள விரிகுடா கடலுக்கு வீணாக செல்கிறது. இதனால் இந்த ஆறு பல மாதங்கள் வறண்டே காணப்படும் நிலை உண்டாகிறது.

இந்த ஆற்றில் பல இடங்களில் தடுப்பணைகள் அமைத்தால் பருவமழை காலத்தில் வரும் வெள்ள நீரானது அந்த தடுப்பணைகள் உள்ள பகுதியில் தடுத்து நிறுத்தப்படும். இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரம்.

இதுபோல் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தால் அருகில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய்களிலும் அதிகப்படியான தண்ணீர் கிடைக்கும். இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் செழிப்பான விவசாயம் செய்வார்கள். இங்கு செழிப்பான விவசாயம் நடைபெற்றால் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படியாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 50 ஆண்டுக்கு முன் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அசப்பூர் கிராமத்துக்கும் அருகில் உள்ள புதுப்பட்டு கிராமத்துக்கும் இடையில் இந்த ஆற்றில் தடுப்பணை கட்டியுள்ளனர். ஆனால் இந்த அணையை முறையாக பராமரிப்பு செய்யாததால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமடைந்து விட்டது.

இந்த சேதமடைந்த தடுப்பணையை மேற்கொண்டு பராமரிப்பு செய்யவில்லை. எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஓங்கூர் ஆற்றில் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆற்றின் குறுக்கே புதியதாக தடுப்பணை கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement