பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சதுர்வேதி சாமியார் மீது வழக்குப்பதிவு
சென்னை : பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2004ல் தொழிலதிபரின் மனைவி, மகளை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. சதுர்வேதி சாமியார் உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. 2016ம் ஆண்டுக்குப் பிறகு நீதிமன்ற விசாரணைக்கு சதுர்வேதி சாமியார் ஆஜராகவில்லை.
Advertisement
Advertisement