ChatGPT இனிமேல் சட்டம், மருத்துவம், நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்காது: ஓபன் ஏஐ தகவல்
வாஷிங்டன்: ChatGPT இனிமேல் சட்டம், மருத்துவம், நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்காது என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் பயனாளர்களுக்கு ஏற்பட கூடிய பாதிப்புகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
                 Advertisement 
                
 
            
        இனி ChatGPT வெறும் தகவல்களை விளக்கும் அல்லது பொதுவான கருத்துகளை அளிக்கும் கல்வி கருவியாகவே செயல்படும். உரிமம் பெற்ற நிபுணரின் மேற்பார்வை இல்லாமல் முக்கியமான முடிவுகளை தானியங்கி முறையில் எடுப்பதற்கும் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
                 Advertisement