அறநிலையத்துறைக்கு ரூ.25 கோடி செலுத்த அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை!!
05:19 PM Aug 08, 2025 IST
சென்னை: அறநிலையத்துறைக்கு ரூ.25 கோடி செலுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விரிவாக்கத்துக்காக கோயில் நிலத்தை கையகப்படுத்திய தொகையை உடனே தரவேண்டும். ஆக.13க்குள் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.25 கோடியை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ரூ.25 கோடி செலுத்தாவிடில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.