தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றமா? காங்கிரஸ் உயரதிகாரிகள் கூட்டம் நாளை மறுநாள் முடிவு செய்கிறது

பெங்களூரு: கர்நாடக முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை சந்தித்து பேசினர். இதனால் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசினர். இதற்கிடையே, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்போம் என தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் இதுபற்றி சித்தராமையா கூறுகையில், ‘மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம்.

Advertisement

முதல்வராக நான் தொடர வேண்டும் என அவர்கள் சொன்னால் தொடருவேன். எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை ஏற்று கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்று கொள்வார்’ என்றார். மேலும் பெங்களூரு வந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார். இருவருமே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவுவதால் சோனியா, ராகுல் ஆகியோரிடம் பேசி விட்டு முடிவு செய்தவதாக கார்கே தெரிவித்தார். அதன்படி ராகுலுடன் கார்கே பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் உயரதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் அனைத்து உயரதிகாரிளின் ஆலோசனையின்பேரில் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Advertisement

Related News