நடப்பு சாம்பியன் நார்த்ஈஸ்ட் முன்னேற்றம்: ஆஸி இந்தியா மோதல்: பெர்த்தில் நடக்கும் டெஸ்ட் தொடர்
பெர்த்: ஆஸ்திரலேியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அங்கு 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆஸி பயணத்துக்கு முன்னதாக பெங்களூரில் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முடிந்ததும் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி பெங்களூரில் இருந்து ஆக.8ம் தேதி ஆஸி புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து போட்டி நடைபெறும் பெர்த் நகரில் தங்கியுள்ள இந்திய அணி அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸி-இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் பீகாரின் ராஜ்கிரியில் ஆண்கள் ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. அதற்காக தங்களை தயார் செய்துக் கொள்ள இந்த தொடரை இந்திய அணி முக்கியப் போட்டியாக பார்க்கிறது. கூடவே ஆசிய கோப்பைக்கான அணியை தேர்வு செய்ய உதவும் போட்டியாகவும் இந்த தொடர் இருக்கும். ஆண்கள் அணிகளுக்கான உலகத் தரவரிசையில் ஆஸி 5வது இடத்திலும், இந்தியா 8வது இடத்திலும் இருக்கின்றன.