2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!
டெல்லி: 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டது. 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாகவும் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்தது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
Advertisement
Advertisement