தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 முதல் 13 வயதில் செல்போன் உபயோகிப்போர் 51% பேர்; உள்ளங்கையில் உலகம் இருக்கு உணர்வுபூர்வமாக மனசு இல்லை: ஆட்டிப்படைக்கும் இணையதள அடிமை நோய்

 

Advertisement

நவீன தொழில்நுட்பங்களில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் செல்போன் என்பது மனிதவாழ்வில் இரண்டறக்கலந்த ஒன்றாகி விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாரபட்சமின்றி செல்போன் உபயோகித்து வருகின்றனர். முந்தைய ஆண்டுகளில் தகவல் தொடர்புக்கு மட்டுமே பயன்பட்டது செல்போன். ஆனால் தற்ேபாது இணையத்தின் அசுர வளர்ச்சியால் உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்துள்ளது செல்போன். இதன் மூலம் செய்திகள், தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஒட்டுமொத்த பொழுதுபோக்கு அம்சங்களின் தனித்த உலகமாகவும் செல்போன் மாறி நிற்கிறது. 10 முதல் 13 வயது வரையுள்ள மாணவர்கள் சமூக வலைதளத்தை 51 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இளைய தலைமுறையினர் மாதத்திற்கு 3,400 முறை சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும், 25 சதவீத பேர் பொய்யான சமூக வலைதள கணக்கை உருவாக்கி உள்ளனர். 13 சதவீதம் பதின்பருவ வயதினர் ஆபாச வீடியோக்களை பார்த்தும், அதனை பகிர்ந்தும் வருகின்றனர். அதே ேபால், 7 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகள் அதிக நேரம் செல்ேபான் கேம்ஸ் விளையாடி வருவது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது நமது முன்னோர் கூறிய பழமொழி. இந்தவகையில் தற்ேபாது மக்களிடம் தொடரும் அதீத செல்போன் பயன்பாடு அவர்களை இணையதள அடிமைகளாக மாற்றி வைத்துள்ளது. அவர்களின் உள்ளங்கையில் உலகம் இருந்தாலும் உணர்வுப்பூர்வமான செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

அளவுக்கதிமான நேரம் இணையதளத்தோடு கழிக்கும் செல்போன் பயன்பாடுகள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுவே அவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுத்து உடல்நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இப்படி நூதனமாக உருவாகும் இணையதள அடிமை ேநாயால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழலும் உள்ளது என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இதுகுறித்து மறுவாழ்வு மனவியல் நிபுணர்கள் கூறியதாவது: செல்போன் பயன்பாடு என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் இயல்பாகிவிட்டது. அதிலும் குறிப்பாக கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு செல்போன் உபயோகம் என்பது மக்களிடம் பல்கிப் பெருகிவிட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்டவைகளை நீண்ட நேரம் உபயோகித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் போகும் போது, அதற்கு அடிமையாகும் சூழல் உள்ளது. இந்தவகையில் அவர்கள் இணையதள அடிமை நோய்க்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உதாரணமாக, சில குழந்தைகள் நீண்ட நேரம் வீடியோ கேம் விளையாடுவார்கள்.

அவர்களிடம் இருந்து போனை வாங்கினால், மனச்சோர்வு ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கும் சென்று விடுவார்கள். அதே ேபால், போனில் நெட் கனெக்சன் இல்லையென்றால், எதையோ இழந்தது ேபான்று உணர்வார்கள். ேமலும் அமைதி இல்லாமலும், எரிச்சலூட்டும் மனநிலையிலும் காணப்படுவார்கள். இதுபோன்ற நபர்கள் உறவினர்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்காமல், செல்போனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலையில் இருப்பார்கள். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் தூங்கி எழுந்தவுடன் செல்போனை உபயோகிக்கும் பழக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் குடும்பத்தாரிடம் செலவிடும் நேரம் குறைகிறது. தாய், தந்தை இருவரும் பணிக்கு செல்பவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் வௌியில் எங்கும் செல்லக்கூடாது என்பதற்காக, செல்போனை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர்.

இதன் பாதிப்பை உணராமல் பெற்றோர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.அதே போல, சில குழந்தைகள் மனச்சோர்வு காரணமாகவும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் சூழல் உள்ளது. மனச்சோர்வு உள்ள குழந்தைகளை வௌியே கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான செயல்தான். மருந்து, மாத்திரைகள், பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் பாதிப்பை சரிசெய்யலாம். இந்த மாதிரியான இணையதள அடிமை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க, அரசு சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மனவியல் நிபுணர்கள் கூறினர்.

60 சதவீதத்தில் மட்டுமே அடிப்படை பாதுகாப்பு

19 வயதில் இருந்து 60வயதுக்கு உட்பட்டவர்களே இணையத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து 24மணிநேரத்திற்கு மேல் இணையசேவை இல்லாவிட்டால் எங்களால் இருக்க முடியாது என்று இதில் 72சதவீதம் ேபர் தெரிவித்துள்ளனர். இணையத் தொடர்பு இல்லாவிட்டால் எங்களது அத்தியாவசிய வேலைகள் பாதிக்கும் என்றும் இவர்களில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கு இணைய இணைப்பை பெற்று பயன்படுத்துகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர். இவர்களில் 60சதவீதம் பேர் மட்டுமே, தங்கள் கம்ப்யூட்டர்களில் அடிப்படை பாதுகாப்பினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் தொகுப்புகள், புதிய மால்வோர் புரோகிராம்களை கட்டுப்படுத்தும் வகையில் இல்லை. இணைய இணைப்பு பெறுவதில் 92சதவீதம் அளவில் கம்ப்யூட்டர்களும், 83சதவீதம் அளவில் மொபைல் போன்களும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிச்சம்

‘‘தூக்கமின்மை பாதிப்பு என்பது பெரியவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போதைய சூழலில் குழந்தைகளும் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இரவு நேரத்தில் தூங்கும் முன்பு செல்போன் உபயோகிக்கும் போது, செல்போனில் உள்ள வெளிச்சமானது நம் மூளையில் தூக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் இடையே ஒருவித தூண்டுதலை ஏற்படுத்தும். இதனால் மூளையானது செல்போன் ஒளி படும்போது பகல் என நினைத்துக்கொள்ளும். இதன் காரணமாக பெரும்பாலான குழந்தைகளுக்கு தூக்கமின்மை பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சமூக வலைதளத்தை மிக அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் குறைந்தபட்சம் தினமும் 2 மணி நேரமாவது கலந்துரையாட வேண்டும். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் திறந்தவெளிகளில் விளையாடுவதற்கு அதிக நேரம் செலவிட வேண்டும். உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,’’ என்பதும் மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரை.

பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழல்

இன்றைய காலத்தில் இணையத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை என்ற அளவில் இணையத்தின் வளர்ச்சி உச்சம் தொட்டு வருகிறது. இந்த வளர்ச்சி என்பது நமக்கு பல நன்மைகளை கொடுத்துள்ளது. அதேநேரத்தில் தீங்களுக்கும் மறுபுறம் வழிவகுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக ஒருவரால் தினமும் 8மணிநேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் பாதியை இணையத்தில் செலவிடுகின்றனர். இது வாரத்திற்கு 58மணிநேரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் இணைய தொடர்பு அற்றநிலையில் 3மணி நேரம், ஒருவிதமான மனபாதிப்பில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மற்றொரு ஆய்வில், மனிதர்கள் ஏதாவது ஒரு நிலையில் வாரத்திற்கு 12மணி நேரம் இணைய பயன்பாட்டையும், 11மணி நேரம் சமூகவலைதளங்களிலும், 3.3மணிநேரம் மின்னஞ்சலையும் பயன்படுத்த வேண்டிய சூழல்கள் உள்ளது என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News