சியட் செக்யூரா டிரைவ் சிஐஆர்சிஎல் டயர் அறிமுகம்
சியட் நிறுவனம், செக்யூரா டிரைவ் சிஐஆர்சிஎல் டயர்களை அறிமுகம் செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வட்ட வாழ்க்கைச் சுழற்சிக்கான சியட் புதுமை கண்டுபிடிப்பு என்பதை குறிக்கும் வகையில் சிஐஆர்சிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டயர்கள், நீடித்து நிலைக்கக் கூடிய 90 சதவீத மூலப்பொருட்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. சர்க்கிள் 50 மற்றும் சர்க்கிள் 90 என இரண்டு வகையாக இந்த டயர்கள் கிடைக்கின்றன. சுமார் ரூ.8,999. முதல் ரூ.12,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த டயர்கள் 215/55 ஆர்17 அளவில் கிடைக்கும். 2050ம் ஆண்டில் பூஜ்ய உமிழ்வு என்பதை இலக்காகக் கொண்டு சியட் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்க்கில் 90யில் சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருள் 21 சதவீதமும், புதுப்பித்தக்க மூலப்பொருள் 69 சதவீதமும் கொண்டதாக இருக்கும். சர்க்கிள் 50-ல் சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருள் 5 சதவீதம், புதுப்பிக்கத்தக்க மூலப்பொருள் 45 சதவீதம் அடங்கியிருக்கும். செப்டம்பர் மாதம் முதல் சியட் பிரீமியம் டீலர் ஷிப்களில் இந்த டயர்கள் கிடைக்கும்என நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.