சிபிஎஸ்இ பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பிறப்பித்த உத்தரவின் தற்போதைய நிலை என்ன?.. சேலம் திமுக எம்.பி. செல்வகணபதி கேள்வி
டெல்லி: பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முக்கியமான இடங்களில் உயர் தெளிவுத்திறன் மற்றும் ஆடியோ-விஷுவல் பதிவு திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவ அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதா என சேலம் திமுக மக்களவை உறுப்பினர் செல்வகணபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 2018 ஆம் ஆண்டின் சட்டங்களை அரசு மேம்படுத்தியுள்ளதா எனவும் அவர் கேட்டுள்ளார்.