சிபிஎஸ்இ பள்ளி பொது தேர்வுக்கு 75% வருகைப் பதிவு கட்டாயம்: தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தகவல்
புது டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் பொது தேர்வு எழுத 75 % வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அதிகாரி சன்யாம் பரத்வாஜ் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், எதிர் வரும் பொது தேர்வை எழுதும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 % வருகைப்பதிவு கட்டாயம். மேலும் மருத்துவ அவசர நிலைகள். தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 % தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.