சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதிக நாள்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். வருகைப் பதிவு தீவிரமாக கண்காணித்து வருகை பதிவேட்டை பராமரிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாதாந்திர தேர்வுகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் வருகைப் பதிவு ஆகியவை அக மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்
பள்ளியின் அக மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. பொதுத்தேர்வு நிறுத்தி வைக்கப்படும் மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். 10ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயப் பாடங்களுடன் 2 பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பாடத்தை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.