சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஓபிஎஸ்
கரூர் தவெக பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இறந்தவர்களின் ஆன்மா ஆண்டவரின் திருவடிகளில் இளைப்பாற வேண்டிக்கொள்கிறோம்.
Advertisement
நடந்த சம்பவத்தை பற்றி சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து மக்களுடைய கோரிக்கை, தமிழக மக்களின் கோரிக்கையாகும். எங்கள் கோரிக்கையாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க வேண்டும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வரைமுறைகள் துரிதப்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement