காலம் தாழ்த்தத்தான் சிபிஐ விசாரணை ஆதவ் அர்ஜுனா வீடியோ வைரல்
சென்னை: கரூரில் 41 பேர் பலியானது குறித்து தமிழக அரசு முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. அவரும் உடனடியாக விசாரணையை தொடங்கிவிட்டார். சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதே நீதிபதியை அதிமுக அரசு நியமித்திருந்தது. அப்போது சிபிஐ விசாரணையும் கேட்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்: மதுரை உயர்நீதிமன்றம் ஒருநபர் கமிஷன் போட்டு தான் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் சிபிஐ போட வேண்டும். சிபிஐ கொடுத்ததே காலம்தாழ்த்த 5 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுங்கள் என்று சொல்வது தான்’’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.