சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரிய கார்த்தி சிதம்பரம் மனு ஆக.4க்கு ஒத்திவைப்பு
Advertisement
இது எம்பி கார்த்தி சிதம்பரம் மீதான 4வது வழக்கு. இந்த வழக்கு பெரும் தாமதத்துடன் பதிவு செய்யப்பட்டதாகவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கார்த்தி சிதம்பரம் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ரவீந்தர் துடேஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞரால் வர முடியவில்லை என்பதால் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற கார்த்தி சிதம்பரம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement