குளித்தலை அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறும் குடிநீர்
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி காவேரி ஆற்றில் இருந்து மகிளிப்பட்டி வழியாக மதுரை மாவட்டம் மேலூருக்கு காவேரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் காவேரி கூட்டு குடிநீர் குழாயில் இன்று மாலை திடீர் என உடைப்பு ஏற்பட்டு பல லட்ச கணக்கான லிட்டர் சீறிட்டு வெளியேறியது .இதனால் ராமபேட்டையில் இருந்து குணாசிபட்டி சாலையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 5 கிலோமீட்டர் சுத்தி வரும் நிலை ஏற்பட்டது. மேலும் பல லட்சக்கணக்கான லிட்டர் சீறிட்டு வெளியேறியதில் அருகில் இருந்த நிலங்களில் புகுந்தது. இதனால் வெற்றிலை மற்றும் வாழைத்தோட்டங்களில் காவேரி கூட்டு குடிநீர் தண்ணிரானது குளம் போல் தேங்கி காணப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் துண்டிப்பு ஏற்படுவதும் அருகில் உள்ள நிலங்களில் தண்ணிர் புகுந்து வருவதாகவும் அப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இதற்கு நிரந்தரம் தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.