தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘காவேரி மூச்சு பரிசோதனை’ என்ற பெயரில் காவேரி மருத்துவமனை சார்பில் இலவச நுரையீரல் பரிசோதனை

சென்னை: ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற பெயரில் காவேரி மருத்துவமனை சார்பில் இலவச நடமாடும் நுரையீரல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலகளவில் இறப்புக்கான முதல் 3 காரணங்களில் சுவாச நோய்கள் உள்ளன. பெரும்பாலானவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மூலம் திறம்படக் கையாள முடியும். இந்தியாவில், நோய்களை தாமதமாகக் கண்டறிதல் ஒரு பெரிய சவாலாக தொடர்கிறது.

Advertisement

இந்நிலையில், காவேரி மருத்துவமனை சார்பில் ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற பெயரில் இலவச நடமாடும் நுரையீரல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சி வடபழநியில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று நடந்தது. அதில், தலைமை விருந்தினராக நடிகர் தம்பி ராமையா கலந்து கொண்டார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் முழுவதும் பயணித்து நுரையீரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

அடுத்த சில வாரங்களில், போரூர், பூந்தமல்லி, பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், காரைக்கால், பாண்டிச்சேரி, மேற்கு மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட 20 சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இந்த வாகனம் செல்ல உள்ளது. இந்த மாத இறுதிக்குள் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவர் செல்வி பேசுகையில், ‘காவேரி மூச்சுப் பரிசோதனை இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை சேவையை பொதுமக்கள் தங்கள் பகுதியிலும் கொண்டு செல்ல 044 4000 6000 என்ற எண்ணை அழைக்கலாம். இதன்மூலம், தேவை உள்ள அனைவருக்கும் மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கும்,’என்றார்.

Advertisement