காவிரியில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டி.எம்.சி. நீரை திறக்க கர்நாடகவுக்கு பரிந்துரை..!!
03:53 PM Jul 30, 2024 IST
Share
டெல்லி: காவிரியில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.